Show all

முழுஅடைப்பு வெற்றி மலைப்பிலேயே முடிந்து விடாதீர்கள் ஸ்டாலின்! இலக்கை அடையும் வரை ஓடிக் கொண்டேயிருங்கள்

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தனி ஒருவராக தி.மு.க. கொடியுடன் பேருந்தை மறித்து போராட்டம் செய்த பெண், மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். ஆங்காங்கே சாலை மறியலும் நடந்தன.

ஆம்பூரில் நடந்த போராட்டத்தின்போது பெண் தொண்டர் ஒருவர் தி.மு.க. கொடியுடன் தனி ஆளாக நின்று பேருந்தை மறித்தார். இது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் காணொளியாக பரவியது. இதைப்பார்த்த தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அப்பெண் தொண்டரை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு நிர்வாகிகள் அழைத்து வந்த பெண் தொண்டரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். 

அப்பெண் ஆம்பூரை சேர்ந்த தெய்வநாயகி அகவை54. அவர் கூறுகையில், நான் 34 ஆண்டாக தி.மு.க.வில் இருக்கிறேன். எனது குடும்பமே தி.மு.க.வில் இருக்கிறோம்.

தி.மு.க. நடத்தும் எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்வேன். 4 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்து வருகிறேன். உழவர்களுக்கு ஆதரவாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது பேருந்துகள் ஓடுவதை பார்த்து அதை மறிக்க கூடாதா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். பின்னர் தனி ஆளாக சென்று பேருந்தை மறித்தேன்.

ஸ்டாலின் இதை பெருமிதமாக மட்டும் முடித்துக் கொள்ளக் கூடாது. பாஜகவின் ஆளுநர் ஆட்சி நடக்கும் தமிழகத்தில், நீங்கள் சாதித்துக் காட்ட வேண்டும். காவிரிக்கு மேலாண்மை வாரியம் பெற்றேயாக வேண்டும். முழுஅடைப்பு வெற்றி மலைப்பிலேயே முடிந்து விடாதீர்கள் ஸ்டாலின் இலக்கை அடையும வரை ஓடிக் கொண்டேயிருங்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.