Show all

தானியங்கி தடுப்பை உடைத்து வழி ஏற்படுத்தி கிளம்பிச் சென்றார்! சுங்கச்சாவடியில் நேரவிரயத்தால் கோபமடைந்த சமஉ

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் பூஞ்சூர் சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ். இவர் கேரள ஜன பிரகாசம் என்ற கட்சியின் நிறுவனர் ஆவார்.

இவரும் இவருடன் சிலரும் காரில் திருச்சூர் வந்தனர். அங்குள்ள சுங்கச் சாவடி ஊழியர்கள் போக்கு வரத்து நெருக்கடியை சமாளிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளமல் நீண்ட நேரத்தை கடத்தியிருக்கின்றனர். 

தொடர்வண்டிக்கு முன் பதிவு செய்துதிருந்ததால், தொடர் வண்டியை பிடிக்க வேண்டிய அவசரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இருந்ததால் கோபம் அடைந்தார்.  தானியங்கி தடுப்பை உடைத்து வழி ஏற்படுத்தி கிளம்பிச் சென்றார். 

அரசு, மக்களிடம் வரி வாங்குகிற பணத்தில் என்னதான் செய்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கடனுக்கு சாலை அமைக்கச் சொல்லி விட்டு, மக்களிடம் சாலை அமைப்புச் செலவை சுங்கசாவடி வரியாகச் செலுத்தச் செய்கிறது. தேவையில்லாத போக்குவரத்து நெருக்கடி, நேர விரயம், வண்டிகளுக்கு எரிபொருள் சேதாரம், அன்னிய செலவணி விரயம் தேவையா சுங்கச் சாவடிகள் என்கிறார் சட்டமன்ற உறுப்பினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.