Show all

புதன்கிழமை வெளியாகிறது! ஜெயம் ரவியின், 'அடங்கமறு' படத்தின் முன்னோட்டம்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் ஜெயம் ரவி 'டிக் டிக் டிக்' படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் 'அடங்க மறு' அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மிடுக்கான காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் அடங்கமறு படத்தின் விளம்பரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் புதன் கிழமையன்று அடங்க மறு படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு கதைத்தலைவியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை நெடுந்தொடர் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.