Show all

குஜராத், மோடியின் வணிகக் கூட்டாளிகளுக்கு சொந்தமானதா! ராகுல் காந்தி கடும் தாக்கு

 

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் கருத்துப் பரப்புதலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இருகட்சி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மோடியின் ரூபாய் தாள் ஒழிப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்த ராகுல் காந்தி,

கருப்பு பணத்தை வௌ;ளையாக மாற்ற நடந்த சதிதிட்டமே என குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் குஜராத் மாநிலம் வெறும் 5, 10 தொழிலதிபர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது, விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கும் சொந்தமானது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் அனைத்து பணிகளும் 5, 10 தொழிலதிபர்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளது. அந்த தொழிலதிபர்கள் பிரதமர் மோடியின் வணிகக் கூட்டாளிகள்.

(இந்தியாவையே தன் வணிகக் கூட்டாளிகளுக்கு என்று மோடி பிரகடனப் படுத்தி விட்ட நிலையில்-

திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல குஜராத் மோடியின் வணிகக் கூட்டாளிகளுக்கு சொந்தமானது என்று பேசுகிறார் ராகுல்.)

மோடி டாடா நானோ தொழிற்சாலைகளுக்கு ரூ. 33,000 கோடி கொடுத்து உள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

நீங்கள் உங்களுடைய நிலம், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை டாடா நானோவிற்காக இழந்துவீட்டீர்கள். என பொதுமக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.

தொழிலதிபர்கள் சென்றால் மோடி ரூ. 33 ஆயிரம் கோடி கொடுக்க தயாராக உள்ளார், ஆனால் இதுவே ஒரு மீனவர் சென்றார் 300 ரூபாய் கூட கொடுக்க பிரதமர் மோடி தயாராக இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.