Show all

இரட்டை இலையை மீட்கவே இரட்டை இலையை எதிர்த்து போட்டி: தினகரன்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் அணியின் 5 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இராதாகிருட்டினன்நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் கூறியதாவது:

நிர்வாகிகள் முடிவின்படி, இராதாகிருட்டினன் நகரில் நிச்சயமாக போட்டியிடுவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்போம்! இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி மீட்டெடுப்போம்.

தேர்தல் ஆணையத் தீர்ப்பு வந்ததும், இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்தே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சதி நடந்துள்ளது தெரிகிறது.

பாஜகவின் சதிக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் உடந்தை.

கட்சியை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது; ஆட்சியாளர்களுக்கு கட்சி குறித்து கவலையில்லை

இடைத்தேர்தலின்போது அவசரமாக சின்னத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதி சுற்றில் நமக்கே வெற்றி.

சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.