Show all

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார்: ராகுல்

 

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று உள்ளார் என குற்றம்சாட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டு உள்ளார். 

     குஜராத் மாநிலம் மெக்சானாவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். “ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரானது கிடையாது, மாறாக நேர்மையான மக்களுக்கு எதிரானது,” என்றார் ராகுல் காந்தி.

தொடர்ச்சியாக அவர் பேசுகையில் குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி பெருமளவு லஞ்சம் பெற்றார் என குற்றம் சாட்டிஉள்ளார்.

     கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சகாரா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வருமான வரித்துறையிடம் முக்கைய ஆவணங்கள் கடந்த 2.5 வருடங்களாக உள்ளது, இதுவரையில் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணையானது தொடங்கப்பட வேண்டும். பிர்லா வழங்கிய தொகை தொடர்பான ஆவணங்கள் உள்ளது. இப்போது பிரதமராக உள்ள நீங்கள் (பிரதமர் மோடி) இது உண்மையா? இல்லையா? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள். பிரதமர் மோடி உண்மையை பேச வேண்டும் மற்றும் நிரூபிக்க வேண்டும்.

     முதல்வராக இருந்த போது சகாராவிடம் இருந்து மோடி பணம் வாங்கியது தொடர்பாக ஆவணங்கள் உள்ளது.

     வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது வருமான வரித்துறை முக்கியமான ஆவணத்தை பறிமுதல் செய்தது, அதில் 6 மாத காலங்களில் பிரதமர் மோடிக்கு அவர்கள் 9 முறை வழங்கிய பணம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்று உள்ளது என ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.

     வருமான வரித்துறை தகவல்களின் படி பிரதமர் மோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி ரூ. 2.5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 27-ம் தேதி ரூ. 2.5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 29-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதம் 6-ம் தேதி பிரதமர் மோடிக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 19-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்கப்பட்டு உள்ளது. 2014 ஜனவரி மாதம் 13-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜனவரி 28-ம் தேதியும், பிப்ரவரி 22 தேதியும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.