Show all

பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை! முன்னோடி உலக நாடுகள்

     இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போல உலகின் வேறு சில நாடுகளும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.

     பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு திட்டம் மோடியின் மூளையில் உதித்த திட்டமெல்லாம் ஒன்றுமில்லை. பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிப்பு முயற்சியில் ஈடுபட்ட முன்னோடி உலக நாடுகளின் திட்ட நகல்.

     அவர்கள் திட்டத்தை நகல்; எடுத்த மோடி, திட்டத்தில் அவர்கள் கற்ற பாடத்தை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளாததுதான் விந்தையும் வேடிக்கையும்!

இந்தியாவிற்கு முன்னர் இந்த திட்டத்தை அறிவித்த 8 நாடுகள் பட்ட இன்னல்களின் பட்டியல்-

     நைஜீரியா: கடந்த 1984 ஆம் ஆண்டு முகமதுபுகாரி என்பவர் ஆட்சி செய்த காலத்தில் அதுவரை புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் கடன் வரம்பு எகிறியதோடு மட்டுமில்லாமல் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மீள முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

     கானா: வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 1982 ஆம் ஆண்டு அப்போதைய கானா அரசு புழக்கத்தில் இருந்த 50 செடீஸ் நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. இது பொதுமக்கள் கறுப்புப் பணத்தை ஆதரிக்கும் நிலைக்கு வழிவகை செய்தது. மேலும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு வேறு பொருட்களில் முதலீடு செய்யவும் ஆரம்பித்தனர். இதனால் கானாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது.

     பாகிஸ்தான்: இதுவரை புழக்கத்தில் இருக்கும் பெரிய நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், அதற்கு பதிலாக புதிய வடிவமைப்பிலான நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. மேலும் இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.

     ஜிம்பாப்வே: கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக அதிபர் முகாபே விசித்திரமான ஒரு முடிவு ஒன்றை மேற்கொண்டார். புதிதாக 100 ட்ரில்லியன் டாலர் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார். இருப்பினும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது மட்டுமல்ல இந்த நோட்டுகளின் மதிப்பு உலகச் சந்தையில் கடும் வீழ்சியை சந்தித்தன..

     வடகொரியா: கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென்று அதுவரை புழக்கத்தில் இருந்த நோட்டுகள் எதுவும் செல்லாது என்ற ஒரு அறிவிப்பு வெளியானது. அரசின் ஒரே ஒரு அறிவிப்பால் 100 ரூபாயின் மதிப்பு வெறும் 10 ரூபாய் ஆனது. இதனால் பொதுமக்கள் அடிப்படை தேவைகள் ஏதுவும் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

     சோவியத் ஒன்றியம்: கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை தடை செய்து அதிபர் மிக்காயேல் கார்பச்சேவ் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு அவருக்கு எதிராகவே பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் அளவுக்கு மோசமான சூழலை உருவாக்கியது. இது தான் சோவியத் ஒன்றியம் துண்டு துண்டாக காரணமாக அமைந்தது.

     மியான்மர்: 1987 ஆம் ஆண்டு மியான்மர் ராணுவம் அதுவரை புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பை 80 சதவிதம் குறைப்பதாக அறிவித்தது. இந்த முடிவு பொதுமக்கள் அரசுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளியது. பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.

     ஆஸ்திரேலியா: உலகில் முதல் முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய பெருமை ஆஸ்திரேலிய நாட்டையே சேரும். அதுவரை புழக்கத்திலிருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளும் கால அவகாசத்தோடு முறையாகத்  திரும்பப்பெறப்பட்டு பிளாஸ்டிக் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தியது.

     இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நேரப்போகிற கதியைப் பொறுத்து, இருந்து, இருப்பவர்கள் பார்ப்போம்.

 

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.