Show all

ஆளுநர் டெல்லி பயணம்! தமிழகத்திற்கு காவிரி விவகாரத்தில் மோசடி செய்த மோடி, தமிழகவருகை குறித்து ஆராயவா

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 7 மணிக்கு தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசு மீது, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதே நேரம், மோடி அரசும் மனு பதிகை செய்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான அறங்கூற்றுமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் சொல் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அப்புறம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசமும் கோரியுள்ளது. தலைப்பே புரியவில்லை என்கிற போது எதற்கு மூன்று மாத அவகாசம்.  

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் செவ்வாயன்று நடுவண் உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்டவர்களைச் சந்தித்து தமிழகத்தில் நிலவும் போராட்ட சூழல் குறித்து எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

மோடி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் உலவி வருகிறது. ஒருபக்கம் காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிரான மோடியின் மோசடி! இன்னொரு பக்கம் மோடியின் தமிழகம் நோக்கிய வருகை! தமிழர்கள் குறித்து என்ன கருதிக் கொண்டிருக்கிறது மோடி அரசு என்று நாம் குழம்பிக் கொண்டிருக்கிற வேளையில், ஆளுநரது தில்லி பயணம் தலையாயத்துவம் பெறுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,745.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.