Show all

திரும்பிப்போ மோடி! சொந்த மண்ணான குஜராத்திலேயே தலைப்பாகியுள்ளது

குஜராத் பால விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார் மோடி. மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார். தலைமைஅமைச்சர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென திரும்பிப்N;பா மோடி முழக்கம் தலைப்பாகத் தொடங்கியுள்ளது. 

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத் பாலம் விபத்து காரணமாக தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி இப்போது குஜராத் சென்றுள்ள நிலையில், திடீரென 'திரும்பிப்போ மோடி' தலைப்பாகி வருகிறது. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் கட்டப்பட்டது. 143 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலம் இத்தனை ஆண்டுகளாகப் பயன்பாட்டில் தான் இருந்து வந்தது. 

இந்தாண்டு தொடக்கத்தில்தான் பேணுதல் பணிகளுக்காக என்று இந்த பாலம் மூடப்பட்டது. சுமார் 7 மாதங்களாகப் பாலத்தின் பேணுதல் பணிகள் நடந்தன. கடந்த 08,ஐப்பசி (அக்.25) அன்று இந்த பாலத்தின் பேணுதல் பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தான் முந்தாநாள் இந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்து மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 140 பேர்கள் இந்த விபத்தில் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

இந்த விபத்திற்கு குஜராத் அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த பாலம் அதிகபட்சமாக 125 பேரின் எடையைத் தான் தாங்க முடியும். இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுமார் 500 பேர் வரை பாலத்தில் அனுமதித்து உள்ளனர். இதுவே விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்து உள்ளது. தலைமைஅமைச்சர் மோடியின் சொந்த மாநிலத்தில் இந்த விபத்து நடந்ததால், இந்தப்பாடு குறித்து நரேந்திர மோடி உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார். 

விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார். மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார். தலைமைஅமைச்சர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென திரும்பிப்N;பா மோடி முழக்கம் தலைப்பாகத் தொடங்கியுள்ளது. 

எப்போதும் தலைமைஅமைச்சர் மோடி தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்குச் செல்லும் போது தான் இதுபோன்ற முழக்கம் தலைப்பாகும். ஆனால், இப்போது மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குச் செல்லும் போது இந்த முழக்கம் தலைப்பாகி வருகிறது. 

கீச்சுத் தரவுகளின்படி பிற்பகல் வரையிலுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீச்சுகள் திரும்பிப்போ தலைப்பில் கீச்சுகள் பதிவிடப்பட்டு இருக்கிறது. தலைமைஅமைச்சர் வருவதால் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், அதனைத் திறனாய்வு செய்தே பலரும் இந்த திரும்பிப்போ மோடி தலைப்பில் கீச்சு பதிவிட்டு வருகின்றனர். 

வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் நாட்டை விற்பதில் கவனம் செலுத்தினால் இதுதான் நடக்கும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சிலர் இந்தத் திரும்பிப்போ மோடியில் கருத்து கூறி வருகின்றனர். 

தலைமைஅமைச்சரின் வருகையை முன்னிட்டு அங்குள்ள மருத்துவமனையை வண்ணமடித்து, படுக்கை விரிப்புகளை எல்லாம் கூட மாற்றும் காணொளி இணையத்தில் வெளியானது. இதைச் சாடிய எதிர்க்கட்சிகள், 'காயமடைந்தவர்களைக் கவனிப்பதை விட மோடியின் வருகைக்கு முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதுவே அவர்கள் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது' என்று கூறி வருகின்றனர்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,419.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.