Show all

வரவு-செலவில் தொடர்வண்டித் துறைக்கு கூடுதல் நிதியாம்; பொதுப் பயணிகளுக்கு கூடுதல் பெட்டிகள் ஒதுக்கினால் தேவலாம்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டில் உள்ள 11 ஆயிரம் தொடர்வண்டிகள் மற்றும் 8 ஆயிரத்து 500 தொடர்வண்டி நிலையங்களில் கண்காணிப்பு படக்கருவிகளை அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு வரவிருக்கும் வரவு-செலவு பதிகையில் போது வெளியாக உள்ளது. நடுவண் அரசு பதிகை செய்யவுள்ள வரவு-செலவு ரயில்வே துறையில் பாதுகாப்புகளை அதிகரிக்கும் விதமாக முதன்மையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் வண்;டிகளில் திருட்டுக்கள் நடைபெறுவதும், குற்றங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகிறது. கண்காணிப்பு படக்கருவி பொறுத்தப்பட்டால் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் தொடர்வண்டிகளிலும் தொடர்வண்டி நிலையங்களிலும், சுமார் 395 கண்காணிப்பு படக்கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் தொடர் வண்;டிகளின் ஒவ்வொரு பெட்டியிலும் 8 கண்காணிப்பு படக்கருவிகள்

ஒவ்வொரு தொடர்வண்டிப் பெட்டியிலும் இனி குறைந்தபட்சம் எட்டு படக்கருவிகள் பொருத்தப்படும்.

கடந்த ஆண்டில் அதிக அளவிலான தொடர்வண்டி விபத்துகள் நடைபெற்றுள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அதிக அளவிலான நிதியை தொடர்வண்டித் துறைக்கு ஒதுக்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தூய்மை, திருட்டு புரட்டு இன்மை, விபத்தின்மை, நிருவாகம், உணவுத் துறையில் தரம், பொறுப்பான ஊழியர்கள், பொறுப்பான அதிகாரிகள், காலம் காத்தல் என்ற வகைகளில் தென்னக தொடர்வண்டி நிருவாகத்திற்கு இணையாக வட இந்திய தொடர் வண்டி நிருவாகம் இல்லை.

ஒரு முறை தமிழகத்திலிருந்து டெல்லி வரை தொடர்வண்டியில் பயணித்துப் பார்த்தால் இந்த வேறுபாடுகளை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

முழு தொடர்வண்டி நிருவாகத்தையும் தொன்னிந்தியத் தொடர்வண்டித் துறையிடம் ஓராண்டுகாலம் நிருவகிக்கும் பொறுப்பை ஒப்படைத்துப் பார்த்து ஒட்டு மொத்த தொடர் வண்டித் துறையை ஒழுங்கு படுத்தலாம்.

தென்னக தொடர்வண்டித் துறைக்கு அதிகாரம் குறைவாய் இருப்பதால் பொதுப் பயணிகளுக்கு அதிக பெட்டிகள் ஒதுக்கி கூட்ட நெரிசலை கட்டுப் படுத்த வாய்ப்பில்லாத ஒரு பெரிய குறை மட்டும் வருத்தப் படும் வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,676

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.