Show all

அதானி கையில்! வீடுகளுக்கு நேரடியாகப் குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்ட வணிக உரிமம்.

வல்லரசு நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஒவ்வொரு வீடுகளிலும் குழாய் இணைப்பில் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த, அதானி குழுமம் உரிமம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால வர்த்தகமும், லாபமும் பெற முடியும். இது அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருவாயை அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இரு தொழிலதிபர்களின் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சி அடைந்தன. அம்பானி ஒருபக்கம் அதானி மறுபக்கம்.

வாகனங்களுக்குச் சில்லறை விற்பனையிலும், வீடுகளுக்கு நேரடியாகப் குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்தைத் தான் தற்போது அதானி கையில் எடுத்துள்ளார்.

இத்திட்டத்திற்காக இந்தியன் எண்ணெய் கழகத்துடன் அதானி எரிவாயு கூட்டணி வைத்து சுமார் 9600 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டத்திற்கான உள்கட்டமைப்பு வேலைகளைத் தொடங்க உள்ளதாக இக்கூட்டணி நிறுவனமான இந்தியன் எண்ணெய்- அதானி எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்கூட்டணி நிறுவனம் இந்தியாவில் 10 மாநிலங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில், தற்போது 2 மாநிலங்களில் வர்த்தகம் செய்ய உரிமம் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ‘இந்தியன் எண்ணெய்- அதானி எரிவாயு’ நிறுவனம் வீடுகளில் சமையலுக்குத் தேவைப்படும் எரிவாயு முதல் வாகனங்களுக்கு நிரப்பும் எரிவாயு, தொழிற்துறை நிறுவனங்களுக்குத் தேவைப்படும் எரிவாயு வரையில் அனைத்தையும் விநியோகம் செய்யும் 

சண்டிகர், அலகாபாத், பானிபட், தமன், உத்தம சிங்க நகர், எர்ணாகுளம், தார்வாட் மற்றும் புலந்த்சாஹர் ஆகிய சுமார் 8 பிராந்தியங்களில் இவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் தென் கோவா-விற்கு வர உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மட்டும் ‘இந்தியன் எண்ணெய்- அதானி எரிவாயு’ கூட்டணி நிறுவனம் 10க்கும் அதிகமான இடங்களை வென்றுள்ள நிலையில், இப்பகுதியில் நகர எரிவாயு விநியோக திட்டத்தைச் செயல்படுத்த 9600 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. இதற்கான வங்கி உதவியைப் பெறுவதற்கான வேலைகளைத் தான் தற்போது ‘இந்தியன் எண்ணெய்- அதானி எரிவாயு’ நிறுவன நிர்வாகம் செய்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,229.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.