Show all

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ICC யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

 ICC டெஸ்ட் போட்டி விளையாடும் தகுதி பெற்ற ஒன்பது அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் 6 அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடரில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விளையாட வேண்டும். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இந்த டெஸ்ட் போட்டி தொடர் இருக்கும். 

ஒவ்வொரு தொடரின் முடிவுக்கு தகுந்தபடி அணிகளுக்கு புள்ளிகள் கிடைக்கும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு தொடரின் டெஸ்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். எவ்வளவு டெஸ்டுகளை ஓர் அணி வெல்கிறதோ அவ்வளவு புள்ளிகளை அள்ள முடியும். 2 டெஸ்டுகள் உள்ள தொடரில் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகளும் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகளும் கிடைக்கும். டிரா ஆனால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். மொத்தம் 27 தொடர்களில் 71 டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

Distribution of points in ICC World Test Championship
Matches in series Points for a win Points for a tie Points for a draw Points for a defeat
2 60 30 20 0
3 40 20 13 0
4 30 15 10 0
5 24 12 8 0

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுநாள் (1-ந் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரும் ஆரம்பமாகிறது. இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் போட்டியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா விளையாட உள்ள தொடர்கள் 
நடைபெறும் மாதம் எதிரணி நடைபெறும் இடம் எண்ணிக்கை 
ஆகஸ்ட் 2019 வெஸ்ட்இண்டீஸ் வெஸ்ட்இண்டீஸ் 2
அக்டோபர்  2019 தென்ஆப்பிரிக்கா இந்தியா 3
நவம்பர் 2019 வங்கதேசம்  இந்தியா 2
பிப்ரவரி 2020 நியூசிலாந்து நியூசிலாந்து 2
டிசம்பர் 2020 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 4
பிப்ரவரி 2021 இங்கிலாந்து இந்தியா 5

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.