Show all

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

 

     மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து  வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

     மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தெலுங்கானா மாநிலத்தில், திராட்சை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என சுமார் 14.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

     தற்போது அவர் காலமாகிவிட்டதாலும் அவருக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லாததாலும்  இந்தச் சொத்துக்கள் அனைத்தையும், தெலுங்கானா மாநில அரசு கைப்பற்ற வேண்டும் என உத்தரவிடக்கோரி, ஹைதாராபாத் நீதிமன்றத்தில் கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

     வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுநல நோக்கோடு இந்த வழக்கு தொடரப்படவில்லை; விளம்பர நோக்கோடு தொடரப்பட்டுள்ளது என்று கூறி, வழக்கை தொடர்ந்த கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி அமைப்பிற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.