Show all

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் அனுப்பிய 4ஆயிரம் மின்அஞ்சல்கள்

 

 

     கருப்பு பணம் பற்றி தகவல் அளிக்க மத்திய அரசு அறிவித்த மின்அஞ்சல் முகவரியில் 4 நாட்களில் 4 ஆயிரம் மின்அஞ்சல்கள் குவிந்தன.

     ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, அந்த நோட்டுகளை வங்கியில் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் செலுத்துபவர்கள் பற்றி தகவல் அளிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் நடுவண் அரசு உத்தரவிட்டது. வங்கிகளும் தகவல் அளித்து வருகின்றன.

     கருப்பு பணம் குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக வருமான வரித்துறையும், அமலாக்கப்பிரிவும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன. அவற்றில், பழைய, புதிய ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்களும் சிக்கி வருகின்றன.

     இந்நிலையில், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி பொதுமக்களும் தகவல் அளிக்கலாம் என்று நடுவண் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதித்துறை உளவுப்பிரிவு அறிவித்தது. இதற்காக கடந்த வௌ;ளிக்கிழமை ஒரு மின்அஞ்சல் முகவரியையும் வெளியிட்டது.

     அந்த முகவரியில், நாள்தோறும் மின்அஞ்சல்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. நான்கே நாட்களில், 4 ஆயிரம் மின்அஞ்சல்கள் வந்து குவிந்துள்ளன. அவற்றின் அடிப்படையில், அடுத்தடுத்து சோதனைகளை தீவிரப்படுத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.

     அத்துடன், வழக்கம்போல், வங்கிகளிடம் இருந்தும் கருப்பு பண வைப்பு பற்றிய அறிக்கைகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கணக்குதாரர்கள் மீது நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கும்.

 

மேலும், ரொக்க கையிருப்பை அதிகமாக காட்டிய நிறுவனங்களும் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வரும் என்று தெரிகிறது. இதன்மூலம், கருப்பு பணத்தை வங்கியில் செலுத்தினால், அது வௌ;ளை ஆகிவிடும் என்ற மாயை தகர்ந்து விடும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.