Show all

விளக்கமளித்தது தேர்தல் ஆணையம்! இன்று வெளியாகி, தீயாகிவரும், வாக்கு இயந்திரங்களை மாற்றும் காணொளிக்கு.

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வாக்கு இயந்திரங்களை மாற்றுவதுபோலவோ, சம்பந்தமில்லாதவர்கள் கையாளுவது போலவோ கருதும் வகையாக  காணொளிகள் சில வெளியாகி தீயாகி வருகிறது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வாக்கு இயந்திரங்களை மாற்றுவதுபோலவோ, சம்பந்தமில்லாதவர்கள் கையாளுவது போலவோ கருதும் வகையாக  காணொளிகள் சில வெளியாகி தீயாகி வரும் நிலையில்...

சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பரவும் கணொளிகள் போலியானவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் இடைவெளி இருந்ததால், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பது தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக இருப்பதாக பரவலாக கருத்து இருந்து வருகிறது.

இந்த நிலையில், வாக்கு இயந்திரங்களை முறைகேடாக கையாளுவதாக காணொளிகளைக் குறிப்பிட்டு வாக்கு இயந்திரத்தை மாற்றுகிறார்கள் என்று புகார் எழுப்பப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், 'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 93 கூட்டங்கள் நடத்தப்பட்டு எதிர்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுவதுபோல பரவும் காணொளிகள் போலியானவை. காணொளியில் உள்ளவை தேர்தலின்போது பயன்படுத்தப்படாத வாக்குப் பதிவு இயந்திரங்கள்' என்று தெரிவித்துள்ளது. 

வியாழக் கிழமை வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, அதிகாரிகள் அல்ல, அவரவர்கள் நம்பும் மதத்தின் தெய்வங்களே வந்து சொன்னாலும் குழப்பம் தீருமா? தெரியவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,159.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.