Show all

இந்தியக் குடும்பங்களில் தங்கம் கையிருப்பு, 25 ஆயிரம் டன்னாக உயருமாம்! உலக தங்க வாரியம் மதிப்பீடு

தென்னாப்பிரிக்கா. (உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதியளவு தங்கம் தரும் நாடு தென்னாப்பிரிக்கா ஓர் ஆண்டிற்கு 700 டன் தங்கம். எனவே, தென்ஆப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், அண்மையில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.) சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா எனப் பல உலக நாடுகளில் தங்கம் உற்பத்தியாகிறது. நமது இந்தியாவிலும் 'கோலார்' தங்க வயலில் தங்கம் உற்பத்தியானாலும் கிடைக்கும் தங்கத்தை விட எடுக்கும் செலவு அதிகம்.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க நகைகள் குறித்து, உலக தங்க வாரியம் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்திய குடும்பங்களில், 23 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. தற்போதைய ஆய்வில், 24 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடும்பங்களில், தற்போது, 25 ஆயிரம் கோடி டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் கையிருப்பில், 608.80 டன், தங்கம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 விழுக்காட்டிற்கும்  அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தங்கப் பயன்பாட்டின் முன்னோடிகள் தமிழர்கள். உலகின் முதல் கடலோடிகளான தமிழர்கள் தங்கள் ஏற்றுமதிப் பொருளாக, மிளகு, ஏலம், கிராம்பு ஆகிய மணப் பொருட்கள்- முத்து, முத்து மாலைகள், மயில்தோகை ஆகிய ஒப்பனைப் பொருட்கள்- மெல்லிய துணி வகைகள் என்பன இருந்தன. 

இவைகளுக்கு மாற்றாக இறக்குமதிப் பொருட்களாக எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமனித்திலிருந்து தங்கத்தை பெற்றார்கள். அக்காலத் தமிழர்கள் தங்கம் என்பதை பொன் என்றே வழங்கினார்கள். பிற்காலத்திலேயே அது தங்கம் என்று அழைக்கப் படுகிறது. அரபு நாடுகளிலிருந்த குதிரையை இறக்குமதி செய்தார்கள் தமிழர்கள். 

இதனால் தமிழக உற்பத்திகள் எல்லாம் பொன்னாக குவிந்தன. அதன் பொருட்டாக- பொன்னால் நாணயங்கள், நகைகள், பாத்திரஙகள் என்று பல்வேறு பயன்பாட்டிற்கு தங்கம் பயன்பாடாகி அதன் மதிப்பும் உயர்ந்தது. 
தற்போது இந்தியாவில், கையில் கழுத்தில் கிடக்கும் நகையிலிருந்து, கோயில் கலசங்கள் முதல், சேலை ஜரிகை வரை தங்கம் இருக்கிறது.

தங்கத்தால் செல்பேசி போன்ற மின்னணுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்க சூரணம், லேகியம் போன்ற மருந்துகளில் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பல் போன பெரியவர்கள் தங்கத்தால் பல்செய்து மாட்டிக் கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்.

ஏழை அன்புத் தாய் தன் குழந்தையை என் தங்கமே...... பொன்னே! என்று அன்பு ஒழுகக் கொஞ்சி மகிழ்கிறாள்; தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கம், பொன், எனப் பெயர் சூட்டி மகிழ்கின்றார்.

அரிதாகக் கிடைக்கக் கூடிய உலோகம் தங்கம் என்பதால், அதற்கு மதிப்பு அதிகம். அதன் மங்களகரமான மஞ்சள் நிறம் கவர்ச்சியுடையது; துருப்பிடிக்காத உலோகம். அது மட்டுமல்லாமல், அதற்கு மற்றும் ஒரு சிறப்புண்டு.

ஒரு கிராம் தங்கத்தைக் கொண்டு நமது வீட்டு மேசை மீது போடும் விரிப்பு அளவுக்கு மெல்லிதாகத் தகடு செய்து விடலாம். 

நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சேமிப்பைப் பணமாக வைத்திருப்பதைவிடத் தங்க நகைகளாக வாங்கிச் சேமித்து வைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் டாலர் வீழ்ச்சியடைந்தால், நமது ஊரில் தங்கத்தின் விலை உயரும். அமெரிக்காவில் வங்கிகள் கடனை வாரி வாரி ஒரு சமயம் வழங்கின. ஆனால், அவற்றை வசூலிப்பதில் தற்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கே நெருக்கடி என்றால், இங்கே தங்கம் விலை உயருகின்றது. ஏனென்றால் தங்கம் உலக செலவணியாகவும் இருக்கிறது.
தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.14.80.    எண்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.29.20
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.79.36
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.89.70 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.1064.00 
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.2720.00 
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.3504.00
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.4964.00 
புதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.6224.00     
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை ரூ.20000.00  

இப்படி காலத்திற்கும் தங்கம் மதிப்பு உயரும் பொருளாக இருக்கிற நிலையில் இந்தியா தங்கத்தை சேமித்து வைப்பதில் தவறு என்ன இருக்க முடியும்.   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,159.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.