Show all

மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி லாபம் ஈட்டிய நிறுவனம்

மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி லாபம் ஈட்டிய நிறுவனம்

மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தியதால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்திச் செலவு ரூ.100 கோடி அளவுக்கு குறைந்துள்ளது.

இதனால் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் ரூ.41 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின்  நிகர லாபம் ரூ.7.49 கோடியாக இருந்தது.

கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில்  சிமென்ட் விற்பனை 20.99 லட்சம் டன் ஆக இருந்தது. தற்போது 21.65 லட்சம் டன் ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொழில் துறை மீதான முதலீடுகள் அதிகரிப்பு, ஆந்திராவில் புதிய தலைநகருக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சிமென்ட்டின் தேவை அதிகரிக்கும்  என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.