Show all

ஆரோக்கிய பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

உலக வங்கியின் உதவியோடு, ஐக்கிய நாடுகள் அவை மற்றும்  உலக சுகாதார அமைப்பு உலகின் மிக ஆரோக்கியமான நாடுகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

இதற்காக 10 லட்சம் மக்களிடம் புள்ளி விபரங்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில் வெளியான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி உலகின் மிக ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது.

89.07விழுக்காடு  வாக்குகளைப் பெற்றுள்ள இத்தாலி இரண்டாம் இடத்திலும்,

88.33 விழுக்காடு    வாக்குகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்தியா இந்தப் பட்டியலில் 103ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அதிகளவில் துரித உணவுகளை உண்பதே மிக குறுகிய வயதில் அதிக இளைஞர்கள் நோய்வாய்ப் பட காரணமாக இருப்பதாக மேற்படி ஆய்வு கூறுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.