Show all

பாஜகவின் மதவாதமும் சிவசேனாவின் மதவாதமும் மேற்கும் கிழக்குமா! அதாவது, பாகிஸ்தானும் வாங்காள நாடும் போல.

பெரிய போராட்டத்திற்குப் பிறகு, பாஜகவின் மதவாதமும் சிவசேனாவின் மதவாதமும் மேற்கும் கிழக்கும் அதாவது, பாகிஸ்தானும் வாங்காள நாடும் போல என்பதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. 

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே. உத்தவ் தாக்கரேவின் தலைமை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், பாஜக, சிவசேனா இரண்டும் மதவாதக் கட்சிகளாக அறியப்படுகின்றவைகள். மதவாதக்கட்சியான சிவசேனாவால் ஏன் மதவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டணியாக ஆட்சி அமைக்க முடியவில்லை என்கிற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் எழுந்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு, சிவசேனா ஆதரவளித்து வந்ததுதாம் இந்த இருவேறு கட்சிகளின் இதுவரையிலான ஒற்றுமை நிலைபாடு. ஆனால் தன்மாநிலமான மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க அதே ஒற்றுமை நிலைபாட்டில் பாஜகதானே ஆதரவளிக்க வேண்டும் என்பது சிவசேனாவின் நியாயமான கேள்வி. 

ஒன்றாக மேற்கு பாகிஸ்தானும், கிழக்கு பாகிஸ்தானும் ஒரே மதவாதநாட்டின் இரண்டு பகுதிகளாக பிரத்தானிய இந்தியாவில் இருந்து ‘ஒற்றுமையாகப்’ பிரிந்து விடுதலை பெற்றன. ஆனால் இரண்டும் மதத்தின் பெயரால் ஒரே நாடாக ஒன்றியிருக்க முடியவில்லை. 

இந்த இடத்தில் தான்: மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் மதஒற்றுமையும்- பாஜக, சிவசேனா மத ஒற்றுமையும் ஒப்பு நோக்கத் தக்கதாய் இருக்கிறது. கிழக்கு பாகிஸ்தான் மதத்திற்கு அப்பாற்பட்டு தங்கள் மண்ணின் கலாச்சாரத்தையும், தங்கள் தாய்மொழியான வங்காள மொழியையும் தூக்கிப் பிடித்தது. ஆனால் மேற்கு பாகிஸ்தானுடையதோ மதஆதிக்கவாதம்.

பாஜக- மேற்குபாகிஸ்தான் நிலைபாடு உடையது. ஹிந்துத்துவா அரசு, கார்ப்பரேட்டுகள் வருமானம், கூலிக்கார மக்கள் என்பது பாஜகவின் நிலைபாடு. ஆனால் சிவசேனா கிழக்கு பாகிஸ்தான் நிலைபாடு உடையது. மராட்டிய மொழியையும், சத்ரபதி சிவாஜியையும், மண்ணின் கலாச்சாரத்தையும் தூக்கிப் பிடிக்கும் கட்சி. பாஜகவின் ஹிந்துத்துவா ஆதிக்கவாதத்தால் அதை அங்கீகரிக்க முடியாது.

தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக, மதச்சார்பற்ற கூட்டணியாக கருதப்படும் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா கைக்கோர்த்திருப்பதாக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 

ஆனால் உண்மையில் பாஜகவின் மதவாதமும் சிவசேனாவின் மதவாதமும் மேற்கும் கிழக்குமாகும். அதாவது, பாகிஸ்தானும் வாங்காள நாடும் போல. சேர்ந்து இயங்க முடியவே முடியாது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை வங்காள நாடாக பிரித்து கொடுத்தது காங்கிரஸ் அன்று. அதே அடிப்படையில்- பாஜக அதிகாரவாதத்தில் சிக்கி, தன்மானம் இனமானம் தாய்மொழியுணர்வு மழுங்கி நின்றிருந்த சிவசேனாவை மீட்டு அதற்கு ஒரு மாநிலத்தின் ஆட்சியைத் தந்திருக்கிறது காங்கிரஸ்  இன்று. நன்றாக வரவேண்டும் என்பது சிவசேனாவின் நோக்கமாக அமையுமேயானால். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் போல சிவசேனா மகாரஷ்டிரத்தில் நிரந்தரமாக காலூன்ற முடியும். வாழ்த்துக்கள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.