Show all

ஹிந்து மதம் இருக்கும் வரை திராவிட இயக்கம் இருந்தேயாக வேண்டும்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் தி.க. சார்பில் பெரியார் பிறந்த நாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.க. நகர தலைவர் குணசேகரன், தி.க. பேச்சாளர் அன்பழகன், நகர செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் வினோத், முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி மற்றும் அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்தனர்.

 

அவர்கள் அப்பகுதியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அருகே திரண்டு நின்று, தி.க. பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சி குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் அவதூறாக பேசுவதாக கூறியும், கோவில் அருகில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்த காவல்துறையினரைக் கண்டித்தும் முழக்கங்;களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் அனந்த பத்மநாபன், துணைகாவல் ஆய்வாளர் கபிலன் மற்றும் காவலர்கள் பா.ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தி.க. பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த தெற்கு வீதிக்கு பா.ஜனதா கட்சியினர் திடீரென செல்ல முயன்றனர். அவர்களைப் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா கட்சியினர் தி.க. பொதுக்கூட்டத்தை கண்டித்தும், காவல்துறையினரைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பா.ஜனதா கட்சியினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் பா.ஜனதா நகர தலைவர் வினோத் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த 5 பேர் மீது ஹிந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளித்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி காவலர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திராவிடர் கழகம் என்பது ஹிந்து மதத்திற்கு எதிரான அறிவாயுதம். ஹிந்து மதம் என்ற தலைப்பில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, மனிதர்களுக்குள் ஏற்றதாழ்வுகளைக் கற்பித்து, அடிமைப் படுத்தப் பட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக பெரியாரால் உருவாக்கப் பட்ட அறிவாயுதம். அதன் பொருட்டே இன்றைக்கு தாழ்த்தப் பட்ட மக்களும், தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப் பட்ட மக்களும் மலைவாழ் மக்களும் சாதிய இடஓதுக்கீட்டால்,  வாழ்மானமும் எழுச்சியும் பெற்று அவர்களும் மனிதர்களாக தலைநிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஹிந்து மதம் இருக்கும் வரை திராவிட இயக்கம் இருந்தேயாக வேண்டும். திராவிட இயக்கக் கூட்டம் நடத்த தடைசொல்ல எவனுக்கும் உரிமையில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,725

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.