Show all

வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிடில், அபராதம்

ஏப்ரல் 1 முதல் வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிடில், அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     குறிப்பாக, பெருநகரங்களில் ரூ.5,000 குறைந்த பட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கூறியுள்ளது. 

     இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில்,

மோடி உத்தரவிட்ட 10 கோடி ஜன்தன் கணக்குகளைப் பராமரிக்க பெரும் செலவாகிறது.

எனவேதான், செலவை ஈடுகட்ட குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்காத கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம்

என்று கூறியுள்ளார்.

     சரி! அதுக்கு மோடியைத்தானே கேட்கணும்?

எங்க வயிற்றிலே ஏன் அடிக்கணும்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.