Show all

அடகு வைத்த மனைவி தாலியை, வங்கி தரமறுத்த அவமானத்தால் தற்கொலை

வங்கிக் கடனைக் காரணம் காட்டி அடகு வைத்த தாலியை மீட்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனுமதி மறுத்துள்ளது. மேலும் விவசாய சங்கத் தலைவரை வங்கியில் இருந்து இழுத்து வெளியே தள்ளியுள்ளனர் அதிகாரிகள்.

     வேளாண் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் மீட்கப்பட்ட தாலியை தர முடியாது என்று வங்கி அதிகாரிகள் ஆணவத்தோடு நடந்து கொண்டனர்.

     இதனால் அவமானப்படுத்தப்பட்ட சித்தாறு பாசன உழவர்கள் சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

     சித்தாறு பாசன உழவர்கள் சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது வேளாண் செலவிற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் கடன் பெற்றுள்ளார். வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகி நாசமாகின. இதனால் அவரால் கடனை திரும்ப கட்ட முடியவில்லை.

     இந்நிலையில் வங்கியில் அடகு வைத்துள்ள மனைவியின் தாலியையாவது மீட்டுவிட வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றார் வேம்புகிருஷ்ணன். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பயிர் கடனை காரணம் காட்டி தாலியை திரும்பத் தர வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் அவமரியாதையோடு விவசாய சங்கத் தலைவரான வேம்புகிருஷ்ணனை பேசியுள்ளார். அதோடு நிற்காமல் வங்கியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வெளியே வங்கி அதிகாரிகள் தள்ளியுள்ளனர்.

     இதனால் மனம் உடைந்த வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

     உழவர்களை வெளியே இழுத்து தள்ளி அவமானப்படுத்துவதும், உழவு இயந்திரங்களைப் பறிமுதல் செய்து அலைகழிப்பதையும் செய்து வரும் வங்கிகளின், வங்கி அதிகாரிகளின் திமிர்தனம் என்று முடிவிற்கு வரும் என்று தெரியவில்லை. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உழவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடன் போன்றவற்றில் வங்கி அதிகரிகள் எடுக்கும் கெடுவபிடி முயற்சிகளில் ஒரே ஒரு விழுக்காடு கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிக்க முயற்சி செய்ய வில்லை. இது போன்ற அரசின் முடிவுகள் விவசாயிகளை மரணத்திற்கும், மாணவர்களை தீவிரவாததிற்கும் எடுத்து செல்லும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.