Show all

உணவுவகைகள் நட்சத்திர விடுதிகளில் இருந்து வரவழைத்து சோட்டாராஜனுக்கு வழங்கப்படுகிறதாம்

பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன

போலி எல்லைக்கடவு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன், தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத்தள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 10நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.

வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி மட்டுமே அளிக்கப்படும். ஆனால் சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. மும்பையில் இருந்தது வரை இந்திய உணவு வகைகளை உண்டு வந்த சோட்டா ராஜன், 27 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு தப்பிச் சென்ற பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டார்.

வேக வைத்த முட்டைகளுடன் கீரை வகைகள், பர்கர், சீஸ் சாண்ட்விச், கார்ன்பிளேக் ஆகியவற்றுடன் குளிர்ந்த காபி அல்லது ஜூஸ் ஆகியவற்றை விரும்பி உண்டு வருகிறார் சோட்டா ராஜன்.

எனவே, இந்த உணவு வகைகளை நட்சத்திர விடுதிகளில் இருந்து வரவழைத்து சோட்டா ராஜனுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ராஜனை நல்ல மனநிலையில் இருக்கும்படி கவனித்துக் கொண்டால்தான் அவரிடம் விஷயங்களைப் பெற முடியும். சிறையில் போரடித்து விடாமல் இருக்க  நான்கு கான்ஸ்டபிள்களை வெளியில் இருந்தபடி பேசிக் கொண்டிருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பலனாக கள்ளநோட்டு மாற்றுதல், தாவூத் இப்ராகிம் குறித்த தகவல்கள் போன்ற முக்கிய தகவல்கள் கிடைத்து வருகின்றன என்றனர்.

தாவூத் உள்ளிட்டோரால் சோட்டா ராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை அடைத்து வைத்துள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 200 தில்லி சிறப்புக் காவல்துறையினர், நடுவண் பாதுகாப்புபடையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.