Show all

கார்ப்பரேட் அண்ணாச்சிகளே! தென்னிந்திய மக்களிடம் உங்கள் வெற்று வாய்ச் சவடால்கள் வேகாது

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இது வரவு-செலவு கூட்டத்தொடரில் அம்பலமானது. கூட்டணிக் கட்சி என்ற முறையிலும், மூத்த அரசியல்தலைவர் என்கிற முறையிலும் இவ்விவகாரம் தொடர்பாக நேரில் பேசுவது தொடர்பாக மோடியை நான் பலமுறை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் பலனில்லை. எனவே, எங்கள் கட்சியைச் சார்ந்த நடுவண் அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலகுகிறோம் என்றார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் மோடி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனிடையே மோடியைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்கள் தங்கள் விலகல் கடிதத்தை கொடுத்துள்ளனர். மோடி கார்ப்பரேட் அண்ணாச்சி! தென்னிந்திய மக்களிடம் உங்கள் வெற்று வாய்ச் சவடால்கள் வேகாது. வெறுமனே சிண்டு முடிகிற வேலைகளை யெல்லாம் விட்டுவிட்டு ஏதாவது செய்ய முயலுங்கள். இப்போதைக்கு ஆந்திர மாநிலத்திற்கு நீங்கள் வாக்குறுதியளித்தபடி தனித்தகுதியை வழங்குங்கள், தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள். தென்னக மக்களிடம் மததுவேசத்தை வளர்க்கும் முயற்சியைக் கைவிடுங்கள். எச்.ராஜாவை அவர் சொந்த மாநிலத்திற்கு திரும்பப் பெறுங்கள். இப்படி நிறைய செய்யலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,720.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.