Show all

காவிரி மேலாண்மைவாரியம் கட்டி எழுப்புங்கள். கர்நாடகத்துக்கு அநியாயம் அல்ல தமிழகத்திற்கு நியாயம்: வைரமுத்து

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் தலைமை அமைச்சர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சென்னை மகாபலிபுரம் அருகே திருவிடந்தையில் இந்திய ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ராணுவ கண்காட்சியில் பங்கேற்க மோடி தமிழகம் வந்தார். மோடியின் தமிழக வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் எதிர்க்கட்சியின் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருப்பு கொடி ஏந்தியும் முழக்கமிட்டும் போராடி வருகின்றனர்.

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைதளமான கிச்சுப் பக்கத்தில் திரும்பிப் போ மோடி என்ற தலைப்பு உலக  அளவில் முதலிடத்தில் சிறப்பு பெற்று உள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது கீச்சுவில்; கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியத் தலைமை அமைச்சருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநியாயம் அல்ல ;தமிழ்நாட்டுக்கு நியாயம் என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,756.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.