Show all

கருப்பு பண விவகாரம்.பெங்களூரில் வங்கி மேலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை

பெங்களூரில் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் விவேக் நகரில் வசித்து வருபவர் ரவிராஜ் (55). ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் பண மேலாண்மை துறையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரூ20 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர சிலருக்கு ரவிராஜ் உதவியதாக கூறப்படுகிறது.

     வங்கியில் அண்மையில் நடைபெற்ற மத்திய குழுவின் சோதனையில், ரவிராஜின் மோசடி வெளிவந்துள்ளது. அதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றச் சாட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரவிராஜ் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கைது குறித்த அச்சம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விவேக் நகர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.