Show all

வரிவிதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வராமல் கறுப்;பு பணத்தை எப்படி ஒழிக்க முடியும்

நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால், வரி விதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் பேசினார்.

     புதுச்சேரி, உப்பளம் துறைமுக மைதானத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திருமாவளன் பேசியதாவது:

     பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தை மீறி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். முதலில், மோடியின் நடவடிக்கையை வரவேற்ற சில கட்சிகளும், பின்னர் நிலைமையை உணர்ந்து, எதிர்த்தனர். ஆனால், மோடியின் அறிவிப்பை நாங்கள் முதலில் இருந்தே எதிர்த்து வருகிறோம். 50 நாட்களில் இந்த பிரச்னை சரியாகிவிடும் என மோடி கூறினார்.

     இன்று இரவு 8.௦௦ மணியோடு அந்தக் கெடு முடிந்து விட்டது. ஆனாலும், நிலைமை சரியாகவில்லை. 

     கறுப்பு பண ஒழிப்பு என்கிற தலைப்பில், பிரதமர் மோடியின்  நடவடிக்கையால், அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மக்களவை, மாநிலங்கள் அவையை கூட்டி, சாத்தியக் கூறுகளை ஆராயாமல், எடுத்தேன் கவிழ்தேன் என்று கறுப்பு பண ஒழிப்புக்கு உண்மையில் மேற்கொள்ள வேண்டிய முயற்சி குறித்து  ஆராயாமல், ஊழல் அதிகாரிகள் மற்றும் கருப்பு பணத்திற்கு மூல முதலான வங்கியாளர்களை நம்பி வெறுமனே பழைய 500, 1000 ரூபாய் தாள் செல்லாது என்ற அறிவிப்பால், 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒட்டு மொத்த இந்திய மக்கள் மீது திணிக்கப்பட்ட தாக்குலாகும். இதற்கு அவர் தாம் பொறுப்பேற்க வேண்டும். கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் யார், ஊழல் செய்பவர்கள் யார் என கண்டுபிடிக்க வேண்டிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டு உள்ளன. சுவிஸ், பனாமா நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விபரங்களை தர தயாராக உள்ளோம் என அந்த வங்கிகள் தெரிவித்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி ஏன் அந்த விபரங்களை கேட்டு பெறவில்லை. கறுப்பு பண முதலாளிகள்தான் மோடியை தாங்கி பிடிக்கின்றனர். அவர் எப்படி கறுப்பு பணத்தை பதுக்கியவர்களை அடையாளம் காட்டுவார். கறுப்பு பணத்தை பதுக்குவதற்கான காரணம், இந்தியாவில் உள்ள வரிவிதிப்பு கொள்கைதான். இந்த வரி விதிப்பு கொள்கை, கந்து வட்டி தொழிலுக்கு நிகரானது. கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால், முதலில் வரி விதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மத்தியில் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டத்தையும், மாநிலங்களில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டத்தையும் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும். ஊழல் ஒழிந்தால் தாம் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்குரிய எந்த ஒரு நடவடிக்கையையும் முறையாக செயல் படுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.