Show all

மாணவிகளின் தலைமுடியை வெட்டி விட்ட தலைமை ஆசிரியர்! காரணம்: மாணவிகளின் தலைமுடிக்கு கூடுதலாக தண்ணீர் செலவாகிறதாம்.

மாணவிகளின் தலைமுடியை வெட்டி விட்ட தலைமை ஆசிரியர். காரணம்;: மாணவிகளின் தலைமுடிக்கு கூடுதலாக தண்ணீர் செலவாகிறதாம். இதைத்தான் சூர்யா கேட்டார்! இப்படியெல்லாம் பள்ளிகளை வைத்துக் கொண்டு, எதற்கு நீட் வைப்பது? இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கவா? 

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாணவர்களை, கல்வி நிறுவனங்களை, ஆசிரியர்களைத் தரப்படுத்த முயலாமல், தரமானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு என்று நடுவண் அரசு நீட் தேர்வு வைக்கிறது? இது எந்த வகை நியாயம் என்று பேசி பரபரப்பு கிளப்பினார் அண்மையில் நடிகர் சூர்யா அவர்கள். 

 
நடிகர் சூர்யா அவர்கள் சாடியது போன்ற ஒரு தரமில்லாத தலைமை ஆசிரியரைக் கொண்ட பள்ளி தற்போது செய்தியாகியிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் மெதக் என்ற பகுதியில் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை 180 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பள்ளியில் இருந்த ஆழ்குழாய் கிணறு வறண்டதால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கப் பட்டது. இதனால் பள்ளியில் அதிக செலவு ஏற்படத் தொடங்கியது.

செலவைக் குறைக்க எண்ணிய பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவிகளுக்கு நீளமாக கூந்தல் இருப்பதால் தான் தண்ணீர் செலவாகிறது. எனவே இந்த கூந்தலை வெட்டி விடுவோம் என நினைத்து 180 மாணவிகளின் கூந்தலையும் வெட்டி முடித்திருத்தம் செய்துள்ளார்.

மாணவிகளைப் பார்ப்பதற்கு பெற்றோர் வந்திருந்த போது, இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள். பின்னர் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதம் செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,245.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.