Show all

மண்ணெண்ணெய் புட்டிகள் வீசும் தீயகலாச்சாரம்

மண்ணெண்ணெய் புட்டிகளை வீடுகள், வாகனங்கள், வணிக நிலையங்களில் வீசிய முன்னெடுப்புகள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில், மண்ணெண்ணெய் புட்டிகள் வீச்சு தொடர்பாக 19 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் அறங்கூற்றுமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் புட்டிகளை வீடுகள், வாகனங்கள், வணிக நிலையங்களில் வீசிய முன்னெடுப்புகள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இது தொடர்பில் பகைமையைத் தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக பாஜக ஆதரவு கிச்சுக் கணக்கு ஒன்றின் மீதும் திமுக ஆதரவு கீச்சு கணக்கு ஒன்றின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என்கிற சொலவடைபோல, கீச்சு கீச்சாக இருக்க வேண்டிய நிலையில்- தமிழ்நாட்டில் சிறு சிறு பாஜக ஆதரவு குழுக்கள் பகைமையைத் தூண்டும் விதத்தில், முன்னெடுக்கும் சிறுபிள்ளைத்தனமான அடிப்படை அற்ற பதிவுகளால், மண்ணெண்ணெய் புட்டிகள் வீசும் தீயகலாச்சாரம் பரவுவதாக இணையச் செய்திகள் திறனாய்வை முன் வைக்கின்றன. இதை பாஜகவின் மேலிடம் கருத்தில்கொண்டு செயல்படுவது பாஜகவிற்கும், தமிழ்நாட்டின் இயல்பான கலாச்சாரத்திற்கும் நன்மை பயப்பதாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,384.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.