Show all

தொடரும் சோதனையின் அடுத்த கட்டம்! ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில், இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக

தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு, அவைகளுக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்க்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் நாடுமுழுவதும் இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக பெருஞ்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் பேரறிமுக முற்றம் (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா) என்கிற அமைப்பின் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் ஒன்றிய புலனாய்வு முகாமை மற்றும் நடைமுறையாக்கத்துறை சார்பில் கடந்த கிழமை பெருஞ்சோதனை நடத்தப்பட்டது. 

தற்போது மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அந்த அமைப்பினரின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த கிழமையில் நடந்த சோதனையின் போது கிடைத்த தரவுகள், கைது செய்யப்பட்டவரிகளிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உள்ளூர் காவலர்கள் உதவியுடன் இன்றைய சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில், சமராஜாநகர், பாகல்கோட், பிடார், விஜயபுரா, சித்ரதுர்கா, மங்களூரு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. பாகல்கோட் மாவட்டத்தில் அதன் நிர்வாகிகள் 7 பேரும், பிடார் மாவட்டத்தில் கரீம் என்வரும் கைது செய்யப்பட்டனர். விஜயபுரா மாவட்டத்தில் அதன் தலைவர் அஷ்பக் ஜமஹண்டி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடகா முழுவதும் 75-க்கும் அதிமான இந்தியாவின் பேரறிமுக முற்றத் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு துணைக் காவல்துறை தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நாகர்பேரா பகுதியைச் சேர்ந்த 4 பேரும், தர்ரங் மாவட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் உள்பட 8 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிராவில், மாலேகான், அவுரங்காபாத், நந்தேட், சோலாபூர், ஜால்னா, பர்பானி ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஒன்றியப் புலனாய்வு முகமை, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை, உள்ளூர் காவலர்கள் ஆகியோர் 25 இடங்களில் இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தில் ஏற்கனவே 14 இந்தியாவின் பேரறிமுக முற்றம் நிர்வாகிகளை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர், உள்ளூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பார பகுதியில் இந்தியாவின் பேரறிமுக முற்றம்  நிருவாகிகள் நால்வரைத் தானே குற்றப்பிரிவு காவலர்கள் நேற்றிரவு கைது செய்யதனர்.

இதேபோல டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்தியாவின் பேரறிமுக முற்றம் நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில், மோடிநகர் கலிசான் கிராமத்தில் இந்தியாவின் பேரறிமுக முற்றம் உடன் தொர்புடைய 5 பேரை அம்மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த கிழமை- தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு, அவைகளுக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்க்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் நாடுமுழுவதும் இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக பெருஞ்சோதனை நடத்தப்பட்டது. 

கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், பிஹார், மணிப்பூர், தமிழ்நாடு ஆகிய 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 100க்கும் அதிகமான இந்தியாவின் பேரறிமுக முற்றம் மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,384.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.