Show all

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக உத்தி! தேர்தலில், மதவாதத்தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவது

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை அமைக்க இரண்டு வகையான உத்திகளைப் பயன் படுத்தி வருகிறது பாஜக. ஒன்று மதவாதத்;தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி. இரண்டாவது வாக்கு பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு. கர்நாடகவைப் பொறுத்தவரை வாக்குப் பதிவு இயந்திரத் தில்லுமுல்லு தேiயில்லை என்று கருதுகிறதாம் பாஜக. எல்லா இடங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரத் தில்லுமுல்லுகளையே பயன் படுத்துவது ஆபத்தானது என்பதை பாஜக உணர்ந்திருக்கிறதாம். கர்நாடகவில் பாஜக தேர்ந்தெடுத்திருக்கிற உத்தி ஆர்எஸ்எஸ் களப்பணிதானாம். 

50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களை களமிறக்கும் பாஜகவின் கர்நாடக தேர்தலுக்கான பிரமாண்டத் திட்டம் தயாராம். 50,000 பேர் சேர்ந்து வேலை பார்ப்பதுதான் அவர்களின் இந்த வகைக்கான நடைமுறையாம். உத்தர பிரதேச தேர்தல் தொடங்கி திரிபுரா தேர்தல் வரை எல்லாவற்றிலும் அவர்கள் இந்த விதியை பயன்படுத்தினார்கள். இதை கர்நாடக தேர்தலிலும் பயன்படுத்த இருக்கிறார்கள். 

இப்போது கர்நாடகாவில் 20,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்கள் தான் முதற்கட்ட தேர்தல் பணிகளை செய்ய இருப்பார்கள். தமிழ், ஹிந்தி, கன்னடம் தெரிந்த பணியாளர்களை இவர்கள் பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள். மூன்று மொழி வாக்காளர்களை இது கவர உதவும். 

ஆனால் இந்த வேலை இதோடு முடியவில்லை. இன்னும் 30,000 பேர் வரும் நாட்களில் பணியில் இணைய இருக்கிறார்கள். இவர்கள் 50,000 பேரும் சேர்ந்து பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பார்கள். எல்லோரிடமும் தனித்தனியாக சென்று பேசி இவர்கள், பாஜக பற்றி எடுத்துரைப்பார்கள். இந்த செயலைத்தான் அவர்கள் இதற்கு முன்பு நடந்த மற்ற மாநில தேர்தலிலும் செய்து இருக்கிறார்கள்.

இவர்கள் லிங்காயத்துகள் குறித்து மற்ற மக்களிடம் பேச போகிறார்கள். லிங்காயத்து தனி மத அறிவிப்பால், ஹிந்து மதம் எப்படி உடையும், என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று கருத்துப் பரப்புதல் செய்ய உள்ளனர். அதேபோல் இதில் சில மாற்று மத குருமார்களை பேச வைத்து, மாற்று மத மக்களின் வாக்குகளையும் பெற இருக்கிறார்கள்.

கர்நாடகத் தேர்தலில், வாக்குப் பதிவு இயந்திர உத்தியை பாஜக தேர்ந்தெடுக்காததால், பாஜகவின் வெற்றி அதிர்ச்சி வெற்றியாக அமையாது; தோல்விக்குக் கூட வாய்ப்பிருக்கிறது என்று புலம்புகிறார்களாம் பாஜக அரசியல் ஆலோசனை வட்டாரத்தில். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,758.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.