Show all

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் ஆட்சி நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை: ஆதித்தியாநாத்

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: யோகி ஆதித்யநாத் பேச்சு எத்தகையது என்று இயங்கலையில் ஹிந்துதமிழ் நாளேடு வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் ஆட்சி நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், ஒடிசாவில் விரைவில் தாமரை மலரும், என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது. 1.நம்பத்தகுந்தது 2.நம்பத்தக்கதல்ல 3.சாதுரியமானது எது சரி என்ற வாக்கெடுப்பில்

நம்பத்தகுந்தது என்று 21 விழுக்காட்டினரும், 

நம்பத்தக்கதல்ல என்று 60 விழுக்காட்டினரும்,

சாதுரியமானது என்று 18 விழுக்காட்டினரும், வாக்களித்திருப்பதாக இயங்கலை முடிவு காட்டிக் கொண்டிருக்கிறது. 

ஹிந்துதமிழ் நாளேட்டிற்கும் அப்படியொரு ஆசை இருந்து மக்களிடம் போட்டு வாங்குவதாகவே இந்த வாக்கெடுப்பு முயற்சி என்பதாக நமக்குத் தெரிகிறது.

பாபர் தோற்றுவித்த முகலாயப் பேரரசு 200 ஆண்டுகள் வடஇந்தியாவை ஆண்டது. சமசுகிருதத்திற்கு முடிவு கட்டியதும், உருது, பாரசீக, பாலி மொழிகளின் கலவை மொழியாக ஹிந்தியை உருவாக்கிக் கொடுத்ததும், முகமதிய மதத்திற்கு மாறான, வடஇந்தியாவில் புழக்கத்தில் இருந்த மதக்கருத்துக்களுக்கு ஹிந்து மதம் என்று வடிவம் கொடுத்ததும் அவர்கள் தான். ஹிந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்களை ஹிந்துஸ்தானிகள் என்று அழைத்தவர்களும் அவர்கள் தான்.

இந்த 200 ஆண்டுகளும் மொகலாயர்களால் தமிழகத்தை நெருங்கவே முடியவில்லை. 

அதனால், முகமதியர்கள் தமிழர்களுக்கு பகைவர்கள் ஆவதற்கான வாய்ப்பே எழவில்லை. 

மொகலாயர்களின் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர்கள் தான் வடஇந்திய மார்வாரி பணியாக்கள். அவர்கள்தான் காங்கிரசிலும், பாஜகவிலும் மேல்மட்டத்தில் கோலோட்சிக் கொண்டிருக்கிறவர்கள். 

ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் அதிகாரம் தமிழர்களிடம் என்றைக்கும் எடுபடாது.

தமிழர்கள் தாங்கள் செந்தமிழ் புழங்கிய பகுதியை தமிழ்நாடு என்றும், தமிழின் திசை மொழிகள் புழங்கிய பகுதியை நாவலந்தேயம் என்றும் அழைத்திருந்தனர். 

தமிழர் வணிகத் தொடர்பில், இருந்த ஐரோப்பிய ஆசியப் பகுதிகளில், நாவலந்தேயம் என்று தமிழர், தெரிவிக்க அவர்கள் ந்தேயா என்றே அவர்கள் மொழி இயல்புக்கேற்ப உச்சரித்தனர். அதுதான் இன்றைக்கு இந்தியா.

அதனாலேயே மோடி மற்றும் வடஇந்திய வட்டாரங்கள் இந்தியா என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பாரதம், ஹிந்துஸ்தானிதான் அவர்களுக்கு உடன்பாடு. பாரதம், பாரதிய ஜனதா கட்சி, பாரதிய ரிசர்வ் பைங், என்றுதான் ஹிந்தியில் எழுதுவார்கள்.  

ஹிந்தி மொழியையும், ஹிந்து மதத்தையும், இந்தி, இந்து என்று உச்சரித்து வரலாற்றுத் திரிபுக்கு நாம் காரணமாகி விடக்கூடாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.