Show all

சசிகலா செயலலிதா வீட்டு வேலைக்காரி. அவர் கணவர் ம.நடராசன் என்கிற அடையாளம்

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா எம்ஜியாரோடு இணையாக நடித்தவர்தான் ஆனால்! என்று நேற்று தாழ்த்தப் பட்டவர் செயலலிதா. ஆனால் தமிழக முதல்வர் வரை உயர்ந்தார். அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் திணிக்கப்பட்டது. தீர்ப்பை முன்னிட்டு பதவியும் பறிக்கப் பட்டது. ஆனாலும் தமிழக மக்கள் நாடாளுமன்றத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை வழங்கி தூக்கி நிறுத்தி செயலலிதாவை புனிதப் படுத்தினார்கள்.

ம.நடராசனின் மனைவி சசிகலா என்றால் அவர் எங்கோயோ போய் விடுவார். 

புதிய பார்வை என்கிற இதழின் ஆசிரியர் ம.நடராசன். கலை முதுவர் மொழியியல் பட்டம் பெற்றவர். தமிழ்தொடர்ஆண்டு-5068ல் (1967) மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு, என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இவர் அரசியலில் திராவிட இயக்கங்களோடும், தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ் அடையாள மீட்பு அமைப்புகளோடும் தொடர்புடையவர். புதிய பார்வையில் தனது அரசியல் சார்பைத் திணிப்பதில்லை மாறாக தமிழ் அடையாள மீட்பு அமைப்புகளுக்கு தோள்;; கொடுப்பார். என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் புதிய பார்வை இதழ் குறித்து ஒரு சிற்றிதழ் வெளியிட்டுருந்த திறனாய்வு இங்கு அவர் குறித்து அறிய உதவும். அவர்

இன்றைய நவீன இலக்கியச் சூழலில் பலரது கவனத்தைப் பெற்ற முதன்மையான இடைநிலை இதழ் புதிய பார்வை.

தரமான விசயத்தை ஓரளவுக்கு ஜனரஞ்சகமாகக் கொடுத்து வரும் புதிய பார்வை சாதரண வாசகனை தன் பக்கம் ஈர்த்து இலக்கியம் பக்கம் திருப்புகிறது. கல்லூரி மாணவர் முதல் மூத்த இலக்கியவாதி வரை எல்லோருக்குமான இதழாக இருக்கிறது.

புதிய பார்வைக்கு இரண்டு அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயம் தமிழ்தொடர்ஆண்டு-5093 லிருந்து 5100 வரை (1992- 1999). இரண்டாம் அத்தியாயம் மீண்டும் 5105 லிருந்து (2004) தொடங்கியிருக்கிறது.

தொடக்க கால புதிய பார்வை வட இந்தியா அரசியல்வாதிகளின் நேர்காணல்களுடனும், சுஜாதா, தனுஷ்கோடி ராமசாமி, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோரின் தொடர்கதைகளுடனும் வந்து கொண்டிருந்தது. மும்பைச் சிறப்பிதழ், கல்கத்தா சிறப்பிதழ், டெல்லி சிறப்பிதழ் என மாநில சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச திரைப்படச் சிறப்பிதழும், சிறுகதைச் சிறப்பிதழும் குறிப்பிடத் தக்கவையாகும். சுபமங்களாவிற்கு இணையாக பேசப்பட்ட இவ்விதழில் முதன்மையான கட்டுரைகளும், கவிதைகளும், விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

ஒரு தரமான இதழாக வெளிவந்து கொண்டிருந்த புதிய பார்வை போதிய அளவு விற்பனை இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நின்று போனது.

மீண்டும் புதிய பார்வை புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போதைய இணை ஆசிரியர் மணா. குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் தீராநதி ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். உதவி ஆசிரியர். சுந்தரபுத்தன். இவரும் தேர்ந்த இதழியல் அனுபவம் உடையவர். இப்போதைய புதிய பார்வை கலை இலக்கியம் அல்லாமல் சமூக அரசியலிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலித்து வருகிறது. பலதரப்பட்ட எழுத்தாளர்களும் இதில் எழுதி வருகின்றனர். தமிழ்ச் சூழலில் விவாதத்தை ஏற்படுத்தும் கட்டுரைகளும் , நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுவருகின்றன. 

சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாட்டுப்புற கதைகள், புத்தக விமர்சனங்கள், நிகழ்வுகள் போன்றவையும் வெளியாகி வருகின்றன. புதிய பார்வை புதிய கவிஞர்களை அதிகம் அறிமுகப்படுத்தி வருகிறது.

மணாவின் தமிழகத் தடங்கள், திலகவதியின் உலகம் உனக்குள், பாமரனின் பிச்சைப் பாத்திரம், பரசுராமின் சாளரம், சுந்தரபுத்தனின் நவீன தூரிகை ஆகிய தொடர்கள் முதன்மையானவையாகும். எழுத்தாளர்களின் அனுபவத் தொடரான பயணம் குறிப்பிடத்தக்கது. திரைப்பட விமர்சனமும் முதன்மைக் கவனத்தைப் பெற்று வருகிறது.

ஆசிரியர் பற்றி:

புதிய பார்வை என்கிற இதழின் ஆசிரியர் ம.நடராசன் கலை முதுவர் மொழியியல் பட்டம் பெற்றவர். தமிழ்தொடர்ஆண்டு-5068ல் (1967) மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு, என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இவர் அரசியலில் திராவிட இயக்கங்களோடும், தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ் அடையாள மீட்பு அமைப்புகளோடும் தொடர்புடையவர். புதிய பார்வையில் அந்த அரசியலை திணிப்பதில்லை மாறாக தமிழ் அடையாள மீட்பு அமைப்புகளுக்கு தோள் கொடுப்பார். என்பது குறிப்பிடத்தக்கது.

இணை ஆசிரியர்:

நடுநிலைமையோடு செய்திகளை தரும் மணா இதழியல் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். தீராநதியின் தொடக்க காலங்களில் பெரும் பங்களிப்பு அளித்த மணாவின் புத்தகங்களான நதிமூலம், தமிழகத்தடங்கள் போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

என்ற பெருமைக்குரிய நாடராசனின் மனைவி சசிகலா என்று சொன்னால், திராவிட இயக்கங்களின் அடுத்த பரிணாம நகர்வாக இருக்க வேண்டிய- தமிழியத்தை தூக்கிப் பிடிக்கிறவர் நடராசன் என்று அவரையும் உயர்த்தி, சசிகலாவையும் உயர்த்த வேண்டி வருமே என்பதால், செயலலிதா வீட்டு வேலைக்காரி சசிகலாவின் கணவர் ம.நடராசன் என்கிற அடையாளம் தூக்கிப் பிடிக்கப் படுகிற வஞ்சகம் அரங்கேற்றப் படுகிறது. 

நடராசன் காங்கிஸ் பாஜகவிற்கு எதிரானவர். திராவிட இயக்கங்களின் அடுத்த பரிணாம வளர்ச்சியான தமிழியத்திற்கு திராவிட இயக்கங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவுடையவர். உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களோடு தொடர்பில் இருப்பவர். தமிழீழ விடுதலையை நேசிப்பவர். சசிகலாவிற்கு அந்த அடையாளத்தை கொடுத்து மீட்பதற்குள் ஒன்றுக்கு இரண்டாக எட்டப்பர்கள் கைகோர்த்து அல்ல, தாமரையைத் தாங்கி நிற்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,717

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.