Show all

ஏனுங்க இதுதாங்க எங்க கோயம்புத்தூரு! வாடகை மிதிவண்டியில் புதுமை

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில் நிறைய தொழில்நுட்பங்களுடன் இயங்கும் வாடகை மதிவண்டி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மிடுக்குநகர் திட்டத்தின் முதன்மைப் படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

நேற்று ஆர்.எஸ் புரத்தில் இதன் தொடக்க விழா நடந்தது. அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவையின் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் குறையும். அதேபோல் சுற்றுசூழல் மாசும் இதன் மூலம் குறையும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஓபோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் 6 ஆயிரம் மிதிவண்டிகள் கோவை நகரம் முழுக்க வலம் வர இருக்கிறது. இதில் நிறைய தொழிநுட்பங்கள் இருக்கிறது.

இதற்கு ஓபோ செயலியை செல்பேசியில் தரவிறக்கம் செய்து, கணக்கு தொடங்க வேண்டும். பின் மதிவண்டியில் இருக்கும் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது மட்டுமே இதில் இருக்கும் பூட்டு திறக்கும். 

இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நாம் வாகனத்தை எங்கெல்லாம எடுத்து செல்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியும். எங்கு மறைத்து வைத்து இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

முதல் மூன்று கிழமை மட்டும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கும். கடன்அட்டை, ஆதாயஅட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.