Show all

இடைத்தேர்தலில் பா.ஜ.க. வசம் இருந்த தொகுதி காங்கிரஸ் கைக்கு மாற்றம்

இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் பா.ஜ.க. பாராளுன்ற உறுப்பினராக இருந்த இந்தி நடிகர் வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இந்தத் தொகுதியில், 25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (11.10.2017) இடைதேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

காங்கிரஸ் சார்பில் சுனில் ஜாகர், பா.ஜ.க. சார்பில் சுவரன் சலேரியா, ஆம் ஆத்மி வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் கஜூரியா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

வினோத் கன்னா தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்ற இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருந்தது. அதேவேளையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 117 இடங்களில் 77 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் தங்கள் வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என கருதியது. சட்டசபையில் 20 உறுப்பினர்களுடன் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியும் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தது.

குறித்தபடி தேர்தல் முடிந்து, இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் 4,99,752 வாக்குகள் பெற்று 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சலரியாவை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க. வசம் இருந்த குருதாஸ்பூர் தொகுதி தற்போது காங்கிரஸ் கைக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.