Show all

மீண்டும் தினகரன் இராதகிருட்டினன்நகரில் போட்டியிட விரும்புவதாக அறிவிப்பு

இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன், நேற்று திருச்சியில் அளித்த பேட்டி: பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்தவுடன், மக்களின் நம்பகத் தன்மையை, பழனிசாமி இழந்து விட்டார். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாக்களில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,வையே புறக்கணிக்கின்றனர். கதை சொல்பவரெல்லாம், ஜெயலலிதா ஆக முடியாது. பழனிசாமி தலைமையிலான ஆட்சி, டிசம்பருக்குள் வீட்டுக்கு அனுப்பப்படும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். டெங்கு ஒழிப்பு விசயத்தில், அரசு போதிய கவனம் செலுத்த வில்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்காததாலும், உள்ளாட்சித் துறை முழுமையாக முடங்கிக் கிடப்பதாலும், டெங்குவை கட்டுப்படுத்த முடிய வில்லை. ஆட்சியை காப்பாற்றவும், சட்;டமன்றஉறுப்பினர்களை தக்க வைப்பதிலுமே, பழனிசாமி அரசு கவனம் செலுத்துகிறது. இராதகிருட்டினன் நகர் இடைத் தேர்தலில் போட்டியிட அணியமாக உள்ளேன். ஆனால், பொதுக்குழு மற்றும் உயர்மட்டக் குழு முடிவு செய்வதை பொறுத்து, வேட்பாளர் யார் என்பதை, சசிகலா அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக காரணம் கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் தினகரன் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அவர் அறிவித்துள்ளதால் தினகரனைப் புறக்கணிப்பதற்கு என்னென்ன உள் வேலைகள் நடக்குமோ தெரியவில்லை என்கின்றனர் மக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.