Show all

பெருமைக்குரிய பாஜக முதல்வர் ஆதித்தியாநாத்தின், அடுத்த அசிங்கத்தின் அரங்கேற்றம்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், உ.பி. மாநில அரசு எடுத்து நடத்தும், மஹாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

விபத்தில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியதில், அவரின் இடது கால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், அவரின் கால் துண்டித்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள். அதன்பின், அவரை பொது பிரிவுக்குள்  அனுமதித்தனர். அப்போது, அதே மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், அந்த இளைஞருக்கு தலையணை கொடுப்பதற்கு பதிலாக, சிகிச்சையில் துண்டித்து எடுத்த அவரின் காலையே தலையணையாக வைத்துள்ளனர். 

இதை அறிந்த மருத்துவமனை நிர்வாக குழுவினர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நான்கு பேர் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே உ.பி., மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் உயிர்வளி உருளைகள் இல்லாததால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

‘பாஜக அரசின் பரிந்துரை நீட் தேர்வு’ மருத்துவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படுவார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ளலாமா இந்த அவலத்தை.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,723.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.