Show all

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி மிக மிக கடினம்: அண்மை கருத்துக்கணிப்பு

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிக மிக கடினம் என்கிறது கருத்துக் கணிப்பு தகவல்கள்.

டெல்லியை சேர்ந்த லோக்நிதி மற்றும் சென்டர் ஆப் ஸ்டடி டெவலப்பிங் சொசைட்டிஸ் ஆகியவை இணைந்து, ஏபிபி என்ற செய்தி தொலைக்காட்சிக்காக நடத்திய கருத்து கணிப்பில்,

காங்கிரசுக்கு உற்சாகம் ஊட்டுவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. அது குஜராத்தில் அடுத்த மாதம் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே இங்கு நேரடி போட்டி உள்ளது.

இந்த நிலையில், அண்மையில் நடத்தப் பட்டக் கருத்துக் கணிப்பில் சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கருத்துக் கணிப்பு 200 இடங்களில் 3757 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. 182 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட குஜராத்தில்,

இந்தக் கருத்துக் கணிப்பில் பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,605

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.