Show all

அரசியல் உள்நோக்கத்துடனான வருமான வரிச் சோதனையைக் கண்டித்தவர்களுக்கு நன்றி: தினகரன்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை இன்று பிற்பகலில் நிறைவு பெற்றது.

     ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முகமானது இந்தச் சோதனை என்று தற்போது தெரிவிக்கப் படுகிறது.

     தொடர்ந்து 5 நாட்களாக நடந்து வந்த வருமான வரிச் சோதனையில், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப் படுகிறது.

     அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 187 இடங்களில் சோதனை மேற்கொண்டதாகச் சொல்லப் படுகிறது.

     இவற்றில், ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகங்கள், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணப்பிரியா வீடு என சென்னையில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் பல இடங்களில் 5வது நாளாக சோதனை நீடித்தது.

     இந்த நிலையில், ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றதாக சொல்லப் படுகிறது.

     தினகரன் இதழியலாளர் சந்திப்பில்- இந்தச் சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் மோடி அரசால் நடத்தப் பட்டது என்று கண்டனம் தெரிவித்த சீமான், முத்தரசன், வேல்முருகன், திருமுருகன் காந்தி, மனிதநேய மக்கள்கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ், பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த தலைவர்களுக்கு நன்றி தெரவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,605

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.