Show all

இரண்டாவது நாளில் அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சந்தித்தனர்! ராகுல் காந்தியின் இந்தியவோடு நடைபயணத்தில்

நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதாவின் அண்ணன் ராகுல் அருகே சென்று அவருடன் பேசினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, இரண்டாவது நாளாக இந்தியவோடு நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம் கொடுத்தார். 
 
23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ராகுல் காந்தியின் இந்தியவோடு நடைபயணத்தில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியைச் சந்திக்க கன்னியாகுமரியில் பொதுமக்களும் ஆர்வமோடு திரண்டனர்.

ராகுல் காந்தியின் இந்தியவோடு நடைபயணத்தின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை தொடங்கினார் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி. பயணத்தைத் தொடங்கும் முன் இந்தியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

அகத்தீசுவரத்தில் இன்று இரண்டாவது நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பயணிக்கின்றனர். பல ஊர்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்தமப் பயணத்தில் ராகுல் காந்தியுடன் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். செய்தியாளர்கள் பலர் உடன் இருந்தனர். ராகுல் காந்தி முன் வரிசையில் நடந்து வந்தார். ராகுல் காந்தியை சுற்றி அரண் போல தொண்டர்கள் இருந்தனர். ராகுல் காந்தியை சுற்றி இவர்கள் கைகளை வைத்து கோர்த்து பாதுகாப்பாக நின்றனர். ஆனாலும் மக்கள் இவரிடம் பேச அனுமதிக்கப்பட்டனர்.

ராகுல் காந்தி செல்லும் வழியில் ஆங்காங்கே மக்களை சந்தித்தார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசினார். ஜோதிமணி உள்ளிட்டோர் அதை தமிழில் மொழிபெயர்த்தனர். அப்போதுதான் திடீரென ராகுல் காந்தியை நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதாவின் அண்ணன் ராகுல் அருகே சென்று அவருடன் பேசினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, இரண்டாவது நாளாக இந்தியவோடு நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம் கொடுத்தார். 

ராகுல் காந்தி அவரின் கோரிக்கையை கேட்டுக்கொண்டார். அதோடு ராகுல் காந்தியின் அவரின் குடும்ப நிலை குறித்து அனிதாவிடம் சகோதரரிடம் பேசினார். நடந்தபடியே இருவரும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். ஒன்றிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். 

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நீட்முன்னெடுப்பு சோகம் குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,365.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.