Show all

அமித்ஷா மகன் சொத்துக் குவிப்பு வழக்கு எப்போது தொடங்கும்: மோடிக்கே வெளிச்சம்

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரூ.1,000, ரூ.500 ரூபாய்தாள்கள் செல்லாது என மோடி கடந்த ஆண்டு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5118. (08.11.2016) அன்று அதிரடியாக அறிவித்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து, பொது மக்கள் உயிரிழப்புகள் உள்ளிட்ட சொல்லெணா துன்பங்கள் அடைந்தோம். இன்று வரை பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கீச்சுவில் நேற்று ஒரு செய்தி வெளியிட்டார். அதில் அவர்,

  • பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பயனடைந்த ஒருவரைக் கண்டு பிடித்து விட்டோம். அவர் “ஷா இன் ஷா ஆப் டெமோஜெய் அமித்என்று குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பலன் அடைந்த நபர், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் என்று கூறி, அது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள ‘தி வயர்இணையதளத்தின் ‘இணைப்பைத்தந்துள்ளார்.

அதில், ஜெய் அமித்தின் டெம்பிள் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் 2012-2013, 2013-2014 நிதி ஆண்டுகளின் நிறைவில் முறையே ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நஷ்டத்தை சந்தித்து உள்ளது. 2014-15 நிதி ஆண்டில்தான் ரூ.18,728 லாபம் காணப்பட்டுள்ளது. 2015-16 நிதி ஆண்டில் அந்த நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.80½ கோடியாக தடாலடியாக உயர்ந்துள்ளது.

இதில், டெல்லி மேலவை உறுப்பினர் ஒருவரது உறவினரின் நிதி நிறுவனம், ஜெய் அமித் நிறுவனத்துக்கு ரூ.15 கோடியே 78 லட்சம் கடன் வழங்கியதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜெய் அமித் மீதான ராகுல் காந்தியின் கீச்சு குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் 2014-ம் ஆண்டு, மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலரது அதிர்ஷ்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியக் குழுமங்கள் பதிவாளரிடம் தாக்கல் செய்த அறிக்கைகள், ஜெய் அமித்தின் நிறுவனம், 2016-க்கு பின்னர் லாபம் மலைமலையாக கொழிக்கத் தொடங்கி உள்ளதை காட்டுகின்றன.

இன்று நாங்கள் மோடியிடம் கேட்க விரும்புவதெல்லாம், “குள்ள முதலாளித்துவம்பற்றி இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான்.

விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடுவீர்களா? மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் விசாரணைக்கு உத்தரவிடுவீர்களா?

அவர்களை கைது செய்யுமாறு கூறுவீர்களா?

ஜெய், அமித், ஷா என்றெல்லாம் பெயர் இருந்தால், அவர்களை யாரால் கைது செய்ய முடியும்?

நமது தலைமைச் சேவகர் (தலைமை அமைச்சர் மோடி தன்னை எப்போதுமே தலைமை அமைச்சர் என்று கூறாமல் தலைமைச் சேவகர் என்று கூறுவது வழக்கம்), எப்போதும் குள்ள முதலாளித்துவம் பற்றி பேசுவது வழக்கம். ஒருவர் மீது ரூ.10 லட்சம் புகார் வந்தால்கூட, அவரை சி.பி.ஐ.யைக் கொண்டு கைது செய்ய வைப்பது வழக்கம்.

ஆனால் இப்போது பிரதமர் பேச மாட்டார். ஏனென்றால் இது அவரது கட்சித்தலைவரின் மகன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணைப்பில் காணுங்கள்: https://thewire.in/185512/amit-shah-narendra-modi-jay-shah-bjp/

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.