Show all

ரூ.10 லட்சம் செலவில் நீச்சல் குளம்; பழனி கோவில் யானைக்குதான்

இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல் பழனி கோவிலில் உள்ள கோவில் யானைக்கு ரூ.10 லட்சம் செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

பழனியில் பல ஆண்டுகளாக கத்தூரி என்ற யானை கோவில் யானையாக இருக்கிறது. 48 அகவையுள்ள கத்தூரி யானை, கோவில் விழாக்களிலும் தேரோட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவிலின் செல்லப் பிள்ளையாக இருக்கும் இந்த யானைக்கு தற்போது 10 லட்சம் செலவில் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டத்தில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. அருகிலுள்ள கிணற்றிலிருந்து நீச்சல் குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.

இந்த நீச்சல் குளத்தில் நீராடி மகிழும் கத்தூரி யானைக்கு முன்னதாக, குளிப்பதற்கு நீர்த்தூவல் வசதி 1 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.