Show all

ஆறு மாநிலங்களில் மட்டும் மூடுவிழா நடத்தப் போகும் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் 17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 உடன் (30.01.2018) ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தான் அளித்து வரும் தொலைத்தொடர்புச் சேவையினை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளது.

இந்த 6 மாநிலங்களிலும் பிற தொலைதொடர்பு நிறுவனங்களுடன்  போட்டி போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எனவே வாடிக்கையாளர்களை வேறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மாறுமாறும் கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

டிராய் ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் எந்த ஒரு நிறுவனம் மாறும் கோரிக்கையினையும் தொலைதொடர்பு நிறுவனங்கள் 19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 வரை (10.03.2018) நிராகரிக்கக் கூடாது என்றும் டிராய் கூறியுள்ளது. மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனம் புதன்கிழமை டிராயிடம் 6 மாநிலங்களின் சேவை உரிமையினைப் புதுப்பிக்காமல் திருப்பி அளிக்க இருப்பதாகக் கூறியதை அடுத்து டிராய் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

எனவே ஏர்செல் சேவை குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் அளித்து வந்த தொலைத்தொடர்புச் சேவையில் இருந்து ஏர்செல் நிறுவனம் பின் வாங்குகிறது.

ஏர்செல் நிறுவனம் இந்த 6 மாநிலங்களிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்புச் சேவையினை வழங்கி வருகிறது.

ஜியோ தொலைத்தொடர்புச் சேவை துவங்கப்பட்ட பிறகு போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஓர் அளவிற்குத் தாக்குப்பிடித்த நிலையில் சிறு நிறுவனங்கள் பல முழுமையாகத் தங்களது சேவையினை நிறுத்தியுள்ளன.    ஆனால் ஏர்செல் நிறுவனம் இந்த  இடங்களில் வருவாய் குறைவாக இருப்பதாகவும அதனை வைத்துச் சிறப்பான சேவை வழங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளது.  

ஆர்காம் அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்துடன் இணைவதில் ஏற்பட்ட தோல்வியில் ஆர்காம் நிறுவனம் தொலைத்தொடர்புச் சேவையினை விட்டு வெளியேறிய நிலையில் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலச் சேவையினை மட்டும் விட்டுவிட்டு வெளியேறியுள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஏர்செல் தொலைத்தொடர்புச் சேவையினைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. சேவைத் தொடர்ந்து அளிக்கப்படும் என்று ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.