Show all

இன்குலாப் எழுத்துக்களுக்கு இழைக்கும் துரோகம்! சாகித்திய அகாதமி விருது ஏற்பு: குடும்பத்தினர்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் மற்றும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகிக்கு, கதாக்கின் இதிகாசம் எனும் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு காந்தள் நாட்கள் என்கிற கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விருதை வாங்க மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

சாகித்ய அகாதமி விருதை ஏற்க மறுத்து இன்குலாப்பின் குடும்பத்தினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘இவ்விருதை ஏற்றுக்கொள்வது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

கவிஞர் இன்குலாப், கவிதைகளின் வழியே போர்க்குணம் பாய்ச்சிய மக்கள் பாவலன். நசுக்கப்பட்டவர்களின் குரலாக, அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கான பாடல் செய்தவர். இந்தச் சமூகத்தால் வர்க்க நெருப்பில் தொடர்ந்து பொசுக்கப்பட்டவர்களுக்காக உடல்நிலை சரியில்லாதபோதும் போராட்டக்களத்தில் செயல்பட்ட செயற்பாட்டாளர்.

விருது, பாராட்டு இவையெல்லாம் ஒரு கலைஞனுக்கான, கவிஞனுக்கான அங்கீகாரம் அல்ல. தான் வாழும் சமூகத்தில் உள்ள மக்களின் துயர்களை, வலிகளைப் பேசுவதுதான் ஒரு ஆகப்பெரிய அங்கீகாரம் என்பார் இன்குலாப்.

அங்கீகாரம் குறித்து இன்குலாப் ஒரு கவிதை எழுதினார்.

வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை

இந்த அரசு அங்கீகரிக்கும்

என பாரதியைச் சொல்வதாகப் பாடல் அமையும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,644

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.