Show all

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற விமானப்படை விமானம் மாயம்

விமானப்படை விமானம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம், காலை 8:46 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை தொடர்பை இழந்தது. விமானம் 11:30 மணியளவில் அந்தமானைச் சென்று அடைந்து இருக்கவேண்டும், ஆனால் விமானம் மாயமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தைத் தேடும் பணி வங்ககடலில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விமானப்படை விமானம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் மாயமானதைத் தொடர்ந்து விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்படையால் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் விமானப்படைக்குச் சொந்தமான 5 விமானங்கள், 15 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. விமானம் தாம்பரம் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சுமார் 16 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. விமானம் வழக்கமான கூரியர் சேவையில் ஈடுபட்ட போது நடுகடலில் மாயமாகிஉள்ளது. விமானப்படை விமானம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டது விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடற்படை இரண்டு டோனியர் விமானங்கள் மற்றும் 13 கப்பல்களை விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இறக்கிஉள்ளது. இதற்கிடையே கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிகே சர்மா பேசுகையில், “கடற்படை வங்காள விரிகுடாவில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் முழுபடையையும் ஈடுபடுத்தி உள்ளது,” என்று கூறிஉள்ளார். தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. விமானத்தில், 6 விமானப் பணியாளர்கள் 12 விமானப்படை வீரர்கள் ஒருவர் ராணுவத்தை சேர்ந்தவர் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் ஒருவர் கடலோர காவல்படையை சேர்ந்தவர் 8 பேர் பொதுமக்கள் (வீரர்களின் குடும்பத்தினர்) விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் தண்ணீருக்கு அடியில் சமிக்ஞையை கண்டுபிடிக்கும் ஒரு நீர்மூழ்கி கப்பலும் ஈடுபட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.