Show all

அகமதாபாத் போலீசால் வெள்ளியன்று ஹர்திக் மற்றொரு தேசத் துரோக வழக்கின்கீழ் கைது.

சூரத்தைத் தொடர்ந்து அகமதபாத்திலும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குக, இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து கட்டுங்கள் என்ற முழக்கத்துடன் போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் ஹர்திக் படேல்.

இவரது போராட்டத்தால் குஜராத் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது. இதனைத் தொடர்ந்து ஹர்திக் படேல் மீது பல்வேறு வழக்குகளைக் குஜராத் அரசு தொடர்ந்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போராட்டத்தை தடுக்க முயன்றதாக ஹர்திக் படேல் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவர் தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஆனால் 2 நாட்களிலேயே ஹர்திக் படேல் விடுதலையாகிவிட்டார். இருப்பினும் சூரத் போலீசார், போலீசாரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசியதற்காக தேசத் துரோக வழக்கை ஹர்திக் மீது போட்டனர். இந்த வழக்கில் அக்டோபர் 23-ந் தேதி 14 நாள் சிறை காவலுக்கு ஹர்திக் அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அகமதாபாத் போலீசார் வௌ;ளியன்று ஹர்திக்கை மற்றொரு தேசத் துரோக வழக்கின் கீழ் கைது செய்வதாக தெரிவித்தனர். இதனிடையே ஹர்திக் படேல் மீதான தேசதுரோக வழக்குகளை எதிர்த்து அவரது தந்தை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.