Show all

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம்.

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம் என உத்தரபிரதேச அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்களில் 24 மணி நேரத்திற்குள் 5 வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இது போன்ற சம்பவங்கள் பெருகுவதற்கு செல்போன்கள்தான் காரணம் என உத்தரபிரதேச அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இரண்டரை வயது குழந்தை இது போன்ற கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள உண்மையை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முழுக்க இன்றைக்கு செல்போன்கள் மூலம் பெருகி விட்ட இன்டர்நெட் வசதிகள்தான் காரணம்.

செல்போனில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அவற்றை வாங்கி நாம் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இன்றைக்கு கிராமப்புறங்களில் 14 வயது, 15 வயது சிறுவர், சிறுமிகள் மிகவும் சர்வசாதாரணமாக செல்போன்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.இந்த போன்கள் மூலம் மிகவும் ஆபாசமான படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்ககும் நிலை ஏற்படுகிறது. இதுதான் குழந்தைகள் கூட பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதற்கு காரணமாகிறது. இன்றைக்கு சமூகத்திற்குள் ஊடுருவி இளைஞர்கள், குழந்தைகள் மனதை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் செல்போன்களை நாம் எவ்வாறு கையாளப் போகிறோம்?

அவற்றிற்கு என்ன மாதிரியான தண்டனையை வழங்க முடியும்? குறிப்பிட்ட வயதை எட்டுவதற்கு முன்பாகவே இது போன்ற படங்களை செல்போன் மூலமாக பார்க்கும் ஒரு தலைமுறையே நாசமாகிக் கொண்டிருப்பதை நாம் எவ்வாறு தடுக்க போகிறோம்? என்று தெரிவித்தார். அதே போல் இந்தச் சம்பவம் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் தனது டுவிட்டரில், ஸ்மார்ட் போன்கள் வரவுக்கு முன்பாக இது போன்ற மிகப் பெரிய பலாத்கார சம்பவங்கள் நடக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.