Show all

தமிழகத்தில் மீண்டும், வருமான வரித்துறை சோதனை 33 இடங்களிலாம்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர் இருவாரங்களுக்கு முன் சோதனை நடத்தினர். 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தச் சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பட்டேல், மார்க், மிலன், கங்கா உள்ளிட்ட வணிக நிறுவன குழுமங்கள் சார்ந்த 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் ஸ்பெக்டரம் மால் சத்யம் எஸ்2 திரையரங்க உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் அவரது குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

-வருமான வரித்துறை நடுவண் அரசின் துறை. ரூ20,833க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள் கட்டாயமாக வருமான வரி செலுத்த வேண்டும். ஒரு கணக்காய்வாளரை வைத்து, நாமாக நமது வருமானத்தைக் கணக்கிட்டு வருமானத்திற்கு தகுந்த விழுக்காட்டு வரியைச் செலுத்த வேண்டும். வருமானத்தை தவறாகக் கணக்கிட்டு குறைந்த வரி செலுத்துவது வரி ஏய்ப்பு குற்றம் என்று சொல்லப் படுகிறது.

நல்ல கணக்காய்வாளர் கிடைப்பதும், அப்படிக் கிடைக்கும் நல்ல கணக்காய்வாளர்கள் மிக அதிகமான கட்டணம் வசூலிப்பதும் வருமான வரி செலுத்துவோர்களுக்கான பிரச்சனை. விளிம்பு நிலை வருமானம் உள்ளவர்கள் கத்துக் குட்டி கணக்காய்வாளர்களிடம் மாட்டிக் கொண்டு படும் சிரமம் மிகக் கொடுமை.

பெரும்பாலன வருமானவரிச் சோதனைகள் புகாரின் அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் நடத்தப் படுவதாகச் சொல்லப் படுகிறது.

வணிகத்தில் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறுகிற பொதுமக்களைக் குற்றத் தளத்தில் நிறுத்தக் கூடிய வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிற வருமான வரித்துறை அதிகாரிகளின் பொறுப்பும், தகுதியும் ஏனோதானோ வென்று அமைந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்ல அரசின் கடமை.

தமிழர் கட்டமைத்த 10,000 ஆண்டுகளுக்கு மோலான குடும்ப அமைப்பில் பெற்றோர் தம் மக்களை அவ்வளவு எளிதாக குற்றத்தளத்தில் நிறுத்தி விடுவதில்லை.

குடும்பம் ஒரு மாதிரிச் சமதாயம். பழந்தமிழகத்தில், மன்னர்கள் ஆண்ட போதும் கூட நல்ல சமுதாயத்தை மன்னர்கள் எடுத்துச் செல்வதற்கு, தமிழ் குடும்ப அமைப்பு முன்மாதிரியாக விளங்கியிருக்கிறது.

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,620

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.