Show all

தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வருகை தந்த தமிழக ஆளுநர்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்று தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வருகை தந்தார். பின்னர் அவர், குடும்பத்தாருடன் கடற்கரை கோவில், ஜந்து ரதம், சங்கு அருங்காட்சியகம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை கல் ஆகிய பழமையான சின்னங்களைச் சுற்றி பார்த்தார்.

மாமல்லபுரத்தில் உள்ள பழமைச் சின்னங்களின் சிறப்புகள் குறித்து ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் காயத்ரி விளக்கிக் கூறினார்.

அப்போது அங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளிடம், மாமல்லபுரம் பகுதிகள் எப்படி இருக்கிறது? என ஆளுநர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், தலசயனப்பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மாமல்லபுரம் வந்த ஆளுநரை செங்கல்பட்டு துணைஆட்சியர் ஜெயசீலன், சுற்றுலா அலுவலர் சின்னசாமி, சுற்றுலா வளர்ச்சி கழக உணவக மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் துணை காவல்கண்காணிப்பாளர் சுப்புராஜ் தலைமையில், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,620

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.