Show all

சாதனை! உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133வது இடத்தில். தொடர்க மோடி ஆட்சி! வளர்க கார்ப்பரேட்டுகள்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐநாவுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு இந்த ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை இயங்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் 156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் பின்லாந்து என்ற நாட்டில் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18-வது இடத்திலும் இந்தியா 133-வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு இந்தியா, 122வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,727.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.